
வாடிய மல்லிகை மலரிதழ் போல
ஆடியே அன்னார் வாழ்வும் கழிந்தது
தேடிய சொந்த பந்தங்கள் ளெல்லாம்
ஓடியே நின்று வேடிக்கை பார்க்குது!
தாலியே கட்டி யாணைதிட்ட தாரமும்
தவறாக எண்ணியே தொலைந் தோடிப்போனது
தவம்பல செய்து பெற்றவை லண்டன்போய்
தவறாது காசினை தரமாக அனுப்புது.
நாதியற்று நனாதையாய் கிடக்குது பிணமிங்கு
போடடா போடு கொள்ளியை போடு!
ஊரா, உறவா, அண்ணா, தம்பியா?
போட்டால் கிடைக்குது லண்டன் காசு!!
No comments:
Post a Comment